லெபனான் ஊடாக இத்தாலிக்கு கடத்தப்படும் இலங்கையர்கள்
லெபனான் ஊடாக படகு மூலம் இத்தாலிக்கு இலங்கையர்களை கடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இது போன்ற பணமோசடிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என பணியகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிலர் இத்தாலி நோக்கி பயணித்த போது, இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதாக பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த கடத்தலில் ஈடுபடும் நபர்களின் தகவல்கள் தெரிந்தால் 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கும், புலனாய்வு திணைக்களத்தின் 011 2 864 214 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் கோரியுள்ளது.