இப்ராஹிம் ரைசியின் மரணத்தை கொண்டாடும் ஈரானியர்கள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்ததை அந்த நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதன்படி, ரைசியின் மரணத்தை பட்டாசு வெடித்தும், மது விருந்தளித்தும் கொண்டாடுவது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இந்த நிலையில், ஈரான் ஜனாதிபதியின் மரணத்தை கொண்டாடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென இப்ராஹிம் ரைசியின் ஆதரவாளர்கள் கோரியுள்ளனர்.

மேலும், ஈரான் ஜனாதிபதியின் மரணத்தை கொண்டாடுபவர்களை அவரது ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் எச்சரித்து வருகின்றனர்.

இதேவேளை கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் ஈரான் நீதித்துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்