மன்னார் பொது வைத்தியசாலையில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச தாதியர் தினம்

-மன்னார் நிருபர்-

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அர்பணிப்புடன் சேவையாற்றும் தாதியர்களை கெளரவிக்கும் முகமாக மன்னார் பொது வைத்தியசாலை தாதியர்களின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை காலை ‘சர்வதேச தாதியர் தின’ நிகழ்வு இடம்பெற்றது.

மன்னார் பொது வைத்தியசாலையில் தாதிய உத்தியோகஸ்தர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள்,மற்றும் தாதிய உத்தியோகஸ்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்படுகின்ற போதும் அர்ப்பணிப்போடு செயல்படும் தாதிய உத்தியோகஸ்தர்களுக்கான கெளரவத்தை வழங்கும் முகமாக குறித்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் எம்.எச்.எம் அசாத் , கௌரவ விருந்தினராக மன்னார் பிராந்திய சுகாதார சேவை பணிமனை யின் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒஸ்மன் டெனி, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் யோகேஸ்வரன் ,வைத்திய நிபுணர்கள், பொது வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர்,வைத்திய சாலையின் தாதிய பரிபாலகர் மற்றும் ஓய்வு நிலை பரிபாலகர்,சுகாதார ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் தாதிய உத்தியோகஸ்தர்களினால் கலை நிகழ்வுகள் ஒழுங்கு படுத்தப்பட்டு இடம்பெற்றதுடன் சிறப்பாக சேவையாற்றிய தாதிய உத்தியோகஸ்தர்களுக்கு கெளரவிப்பும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்