இந்திய பிரஜைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
கிரிந்த கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு பெண்ணும் ஆணும் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்திய நாட்டை சேர்ந்த 35 மற்றும் 33 வயதுடையவர்களே இவ்வாறு உயிர் இழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் கணவன்-மனைவி என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், குடும்ப உறுப்பினர்களுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சடலங்கள் தெபரவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கிரிந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்