சிறையில் அமைச்சருக்கு மசாஜ் செய்யும் வைரல் காணொளி
இந்தியாவில் அமைச்சரொருவர் திகார் சிறையில் முழு உடல் மசாஜ் செய்யும் சிசிடிவி வீடியோ இந்திய சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தியா-டெல்லியை சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் என்பவரது காணொளியே இவ்வாறு வெளியாகியுள்ளது.
பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் ஜெயின் கடந்த மே 30 அன்று அமலாக்க இயக்குனரகத்தால் (ED) கைது செய்யப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.