அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு ?

அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க முடியாதென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வருடத்தில் அதிகரிப்பு கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நிதி கையிருப்பில் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை 2025ஆம் ஆண்டில் அரச வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்