சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற, தற்போதைய அனர்த்த நிலைமை தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி பிரதேசத்தில் 5 மரணங்களும், மாத்தறை பிரதேசத்தில் 4 மரணங்களும், அவிசாவளை பிரதேசத்தில் 3 மரணங்களும் பதிவாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்