
உலக கிண்ணம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான ரி 20 உலகக் கிண்ண போட்டியில் அரையிறுதி போட்டி நடைபெறவுள்ள தினத்திற்கு மாற்று தினம் வழங்கப்பட மாட்டாது என ஐஐசி தீர்மானித்துள்ளது.
இதேவேளை போட்டியில் மழை குறுக்கிட்டால் 4 மணித்தியாலங்கள் மட்டுமே கூடுதல் நேரம் வழக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஜூன் 2 ஆம் திகதி ஆரம்பமாவதுடன், இறுதிப் போட்டி ஜூன் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
முதல் அரையிறுதிக்கு மேலதிக நாள் வழங்கப்பட்டாலும், இரண்டாவது அரையிறுதிக்கு மேலதிக நாள் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
