
கணவனுக்கு மதுவில் விசம்: மனைவி மற்றும் சகோதரர் கைது
பெலியத்த கொஸ்கஹகொட பிரதேசத்தில் நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் அவரது மனைவியும் மனைவியின் சகோதரனும் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெலியத்த கொஸ்கஹகொட பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாய் (வயது – 45 ), மற்றும் அவரது சகோதரரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொஸ்கஹகொட பிரதேசத்தை சேர்ந்த நபர் கடந்த 20ஆம் திகதி தனது வீட்டில் மது அருந்திய போது ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், பிரேத பரிசோதனையின் போது அவர் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்ததை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணையின் அடிப்படையில் கணவனின் மது கோப்பையில் விஷம் கலந்து கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
