குடும்பத்தகராறு மனைவி கொலை கணவன் கைது

-யாழ் நிருபர்-

யாழில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை குத்திக் கொலை செய்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

கணவன் மனைவிக்கிடையில் நிலவிவந்த குடும்ப தகராறு முற்றிய நிலையில் கணவன் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

குறித்த பெண் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் யாழ்ப்பாண பிரதேச செயலகப் பகுதியில் சில நாட்கள் முன்னே வருகைதந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய கணவனை யாழ்ப்பாண பொலிசார் கைது செய்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்