142 புதிய பொருட்களுக்கு சுங்க குறியீடு எனப்படும் HS குறியீடு

இறக்குமதி – ஏற்றுமதியை எளிதாக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நோக்கில் புதிய பொருட்களுக்கு சுங்க குறியீடு எனப்படும் HS குறியீடு புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, 142 புதிய பொருட்களுக்கு இந்த குறியீடு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் சில தினங்களில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.