
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வீட்டுத் திட்டம்
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரமே அமைச்சரவை இதனை தீர்மானித்துள்ளது.
உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், வீடுகளின் முழு உரிமையை மாற்றும் போது அசல் பயனாளி இறந்திருந்தால், தற்போது அந்த வீட்டில் வசிக்கும் அவரது வாரிசுகளுக்கு உரிமைப் பத்திரம் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, வீட்டு உரிமையாளர்களுக்கு நோட்டரி கட்டணம், முத்திரைகள் மற்றும் உரிமைப் பத்திரங்களை வழங்கும்போது ஏற்படும் பிற வரிகளில் இருந்து விலக்கு அளிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதோடு அதற்கான நோட்டரி கட்டணம், முத்திரைகள் மற்றும் பிற வரிகள் திறைசேரியால் ஏற்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
