ஒவ்வொரு மாதமும் 60 பேர் எச்.ஐ.வி பரிசோதனைக்காக விண்ணப்பம்

எச்.ஐ.வி (HIV) தொற்றுக்கான பரிசோதனைக்காக மாதம் ஒன்றுக்கு சுமார் 60 பேர் ஒன்லைனில் பதிவு செய்வதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

http://www.know4sure.lk  இணையத்தளத்தினூடாக எந்தவொரு நபரும் எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்வதற்கான சந்திப்பை மேற்கொள்ள முடியும், என பால்வினை நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் நிமாலி ஜயசூரிய தெரிவித்துள்ளார்.