
லண்டன் தேர்த் திருவழாவில் சாணக்கியனா? தேரா சிறப்பு? அடியார்கள் விசனம் !
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பகபதி கற்பக விநாயகர் ஆலயத்தின் 22வது மகோற்சவ தேர்த் திருவிழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அவரது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் கோவிலில் சென்று அரசியல் செய்கிறாரா என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கோவில்கள் அரசியற்களமாக மாறியுள்ளதா எனவும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
ஒரு கோவிலில் தேர்த் திருவிழா நடைபெறும் போது ஒரு அரசியல்வாதி அங்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறார் என்றால் அந்த திருவிழாவில் கடவுளைவிட ஒரு மனிதர்தான் சிறப்பு விருந்தினராக இருக்கிறாரா என்று கேள்வி எழுகின்றது.
இதேவேளை கோவில் திருவிழாவிற்கு ஏனைய நிகழ்வுகளை போன்று சிறப்பு விருந்தினரை அழைப்பது எங்கு நடைமுறையில் உள்ளது என்றும் குறித்த கோவில் நிர்வாகம் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
தற்பொழுது கோவில்கள் இறைவனை வழிபடும் இடமாக அல்லாது அரசியல் செய்யும் களமாக மாறிவிட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாக பார்க்கப்படுகின்றது.
மேலும் அரசியல்வாதிகள் கோவில்களுக்குள் கோவிலின் சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகளை மீறி நடந்து கொள்வதும் அங்கு சென்று அரசியல் பேசுவதும் இவற்றை கோவில் நிர்வாகம் கைகட்டி வேடிக்கை பார்ப்பதும் சாதாரண வழக்கமாகி வருகின்றது.
கோவில்களில் இறைவன் விட அரசியல்வாதிகள் பெரியவர்களா என்ற அச்சம் எழுந்துள்ளதாக மக்கள் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


