இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இடமளிக்காது – சர்வதேச ஊடகத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் உட்பட எந்தவொரு விவகாரத்திலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இடமளிக்காதென ஜேர்மனி Deutsche Welle தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நேர்காணலில் ஆசிய நாடுகளான எம்மை “செகண்ட் கிளாஸ் ” என நினைத்து விட்டீர்களா? அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள், என நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவேசமாக பதிலளித்துள்ளார்.