சுவிட்சர்லாந்தில் சுமார் 20 கிலோமீற்றர் போக்குவரத்து நெரிசல்
சுவிட்சர்லாந்தின் தெற்கு பகுதியில் உள்ள கோதார்ட் ஏ1 நெடுஞ்சாலையில் நேற்று சனிக்கிழமை மாலை சுமார் 20 கிலோமீற்றருக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாரியளவில் போக்குவரத்து சேவைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டன.
கோதார்ட் ஏ1 நெடுஞ்சாலையில் நேற்று பிற்பகல் பலமணி மணிநேரங்கள் கோதார்டின் சாலை நிலைமை கடுமையாக மோசமடைந்து போக்குவரத்து ஸ்தம்பித்தது. தெற்கே செல்லும் கோதார்ட் வீதி சுரங்கப்பாதையில் ஏ1 இல் 20 கிலோமீட்டருக்கும் அதிகமான போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன.
இவ்நெடுஞ்சாலையினால் பயணித்தவர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த நிலையில், மாலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
சுவிட்சர்லாந்தின் தெற்கு பகுதியில் உள்ள கோதார்ட் ஏ1 நெடுஞ்சாலையானது 16.9 கிலோமீறறர் நீளம் உள்ள உலகின் ஐந்தாவது நீளம் உள்ள சுரங்கப்பாதையாகும்.
இப்பாதையூடாக மணிக்கு 80 கிலோமமீற்றர் வேகத்தில் பயணம் செய்ய முடியும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்