இந்தோனேசியாவில் வெள்ளம் மற்றும் மண்சரிவு: 37 பேர் பலி
இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி 17 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அவர்களைத் தேடும் பணிகளில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பொதுமக்களின் சொத்துக்கள் மற்றும் உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்