177 பயணிகளுடன் ஓடு பாதையில் தீப்பற்றிய விமானம்

இந்தியாவில் டெல்லியில் இருந்து பெங்களூர் புறப்பட்ட இண்டிகோ 6E 2131 என்ற விமானம் ஓடு பாதையில் ஓடியபோது இன்ஜினில் தீப்பொறி ஏற்பட்டதையடுத்து அவசரமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

நேற்று வெள்ளிக்கிழமை 9.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விமானத்தில் 177 பயணிகள் 7 விமான பணியாளர்களும் பயணித்துள்ளனர்.

விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்ததாகவும், தீ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விமானத்தில் இருந்த பயணி ஒருவர் இயந்திரத்தில் ஏற்பட்ட தீயினை காணொளி பதிவு செய்து டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.