அரிசி ஆலையில் தீ விபத்து
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்ட, அளவெட்டி வடக்கு பகுதியில் அரிசி ஆலையில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
அரிசி ஆலை, வேலைகள் நிறைவடைந்து உரிமையாளரால் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பூட்டப்பட்டது அதன்பின் இன்று சனிக்கிழமை காலை 8 மணி அளவில் அரிசி ஆலை திறக்கச் சென்றபோது, அரிசி ஆலை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்ட உரிமையாளர் அயலவர்களை அழைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
இதன்போது பல லட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி ஆலை இயந்திரங்கள், ஏனைய உபகரணங்கள், தளபாடங்கள் என்பன எரிந்து முற்றாக நாசமாகி உள்ளன.
அரிசி ஆலை உரிமையாளரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மின் ஒழுக்கு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதா, அல்லது தீ வைக்கப்பட்டதா என்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்