
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இடை நிறுத்தப்படும் சாத்தியம்
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இடை நிறுத்தப்படும் சாத்தியம் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ இந்த விடயத்தை தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பிரதான கணக்காளர், இந்த பணிகளை முன்னெடுப்பதற்கான நிதி இல்லை என அறிவித்துள்ளதாகவும், அதனால் குறித்த பணிகள் இடைநிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன் உடற்கூற்று பரிசோதனை முடிவுகளும் தாமதமாவதற்கான சாத்திக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் 6ம் திகதி கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு செப்டெம்பர் மாதம் 15ம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டிருந்தன.
