இன்றும் தொடரும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி  ஐந்தாம் நாளாக இன்று திங்கட்கிழமை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

குறித்த அகழ்வின் போது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இன்றும் ஐந்தாம் நாள் தொடர்சியாக அகழ்வுபணிகள் நடைபெற்று வருகின்றன.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை  உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் ஐந்தாம்நாள் அகழ்வாய்வுகள் திங்கட்கிழமை  முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ ,  தடயவியல் பொலிசார்,  கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அகழ்வுப் பணிகள் இடம்பெறவில்லை இன்று திங்கட்கிழமை ஐந்தாவது நாளாக இன்றும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

 

இதுவரை துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.