கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு : 5 பேரின் உடற்பாகங்கள் மீட்பு

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நேற்று திங்கட்கிழமை ஐந்தாவது நாளாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதுவரை ஐந்து பேரின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் சடலங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக நெருக்கமாக இருந்தமையினால், சடலங்களை எண்ணிக்கை மற்றும் அதனை அடையாளப்படுத்துவதில் சிரமம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், அகழ்வு பணிகளை ஆறாம் நாளாக இன்று செவ்வாய்க்கிழமையும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.