பரீட்சை வினாத்தாள் சர்ச்சை: ஆசிரியருக்கு விளக்கமறியல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் ஆங்கில மொழி வினாத்தாளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியரை இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆங்கில மொழி வினாத்தாளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்