மேற்கு ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் : 120 பேர் பலி

மேற்கு ஆப்கானிஸ்தானில்  ஈரானுக்கு அருகே ஏற்பட்ட நிலஅதிர்வை அடுத்து அங்கு நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரையில் 120 பேரின் உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் மேற்கு நகரமான ஹெராட்டில் இருந்து 40 கிலோமீற்றர் தொலைவில் 6.3 மெக்னிடியுட் அளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.

இதனையடுத்து மூன்று பின்னதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.