
நேபாளத்தில் நிலநடுக்கம் : 20 வீடுகள் சேதம்
நேபாளம் நாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீர் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளதாகவும் இதனால் டாடிங் மாவட்டத்தின் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேபாளத்தின் டாடிங் மாவட்டத்தில் மாத்திரம் நேற்று 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
