
சீனா உதவிகளை பகிர்ந்தளித்தல்: அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய டக்ளஸ்
வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய சீனா அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள 1500 மில்லியன் ரூபாய் பெறுமதியான உதவிப் பொருட்கள் உரியவர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
சூம் – காணொலி ஊடாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் திணைக்கள மாவட்ட பணிப்பாளர்களுக்கான ஆலோசனைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கினார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில், 500 மில்லின் பெறுமதியிலான மீன்பிடி வலைகள், 500 மில்லியன் பெறுமதியில் வீட்டுத் திட்டம், 500 மில்லின் பெறுமதியிலான அரிசி போன்றவை சீன அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
