12 மணிக்குள் பணிக்கு திரும்பாவிடின் பதவி நீக்கம்

இன்று புதன் கிழமை பணிக்கு சமூகமளிக்காத அனைத்து ஊழியர்களும் பதவி நீக்கம் செய்தவர்களாக கருதப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜூலை 10ஆம் திகதி அதாவது இன்று நண்பகல் 12 மணிக்குள் அனைத்து அனைத்து நிலைய அதிபர்கள் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்களும் தங்களது பணியை வழமைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் அவ்வாறு வருகை தராதவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து நீக்கம் செய்தவர்களாக கருதப்படுவார்கள் என இலங்கை ரயில்வே திணைக்களம் சுட்டிகாட்டியுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்