லஞ்சம் பெற்றமை தொடர்பில் அபிவிருத்தி அலுவலரும், வாகன ஒட்டுநரும் கைது

பூச்சிக்கொல்லிகள் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி அலுவலர் ஒருவரும், வாகன ஒட்டுநர் ஒருவரும், லஞ்சம் பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழிலைப் பதிவு செய்வதற்காக, 10,000 ரூபாய் பணத்தை லஞ்சம் பெற்றமை தொடர்பிலேயே, அவர்கள் இருவரும் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரவளையைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள், குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.