மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வியாழக்கிழமை நண்பகல் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

வாகரை பிரதேசத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள இறால் பண்ணை மற்றும் இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யக்கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது ஆர்ப்பாட்டகாரர்கள்இ வாகரையில் இல்மனைட் அகழ்வை உடனே நிறுத்து, என்ற வாசகம் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர் சீலன் மற்றும் வாகரை பிரதேச பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்