இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

-மூதூர் நிருபர்-

திருகோணமலை இலங்கை வங்கியின் பிரதான கிளைக்கு முன்பாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரால் சம்பள உயர்வைக் கோரி இன்று புதன் கிழமை அடையாள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதன்போது “அரச வங்கி ஊழியர்களுக்கு வரிச்சுமைக்கு ஏற்ற சம்பளம் ஒன்றை உடன் பெற்றுத்தருக”, “அரச வங்கிகளின் கூட்டு உடன்படிக்கை கத்தரிப்பை உடன் சரி செய்க”, “பணிப்பாளர் சபைகள் பரிந்துரைத்த அரச வங்கிகளின் சம்பள அதிகரிப்பை உடன் பெற்றுத் தருக” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் திருகோணமலையில் உள்ள அரச வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கி, கிராம அபிவிருத்தி வங்கி மற்றும் HDFC வங்கி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்