
நாடாளுமன்றில் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விவாதம் இன்று
ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டுவந்துள்ள சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாதம் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த விவாதத்தை கோரியுள்ளார்.
இந்த விவாதம் நாளை வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.
அத்துடன் சபாநாயகர் தலைமையிலான நாடாளுமன்ற அலுவல்கள் குழுவின் அங்கீகாரத்தின் பின்னர் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.
இதேவேளை ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிடும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் இந்த வேலைத்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
