
பணிப்பெண்ணை ஆணிகளை உட்கொள்ள வைத்த கொடூரம் : விசாரணை அறிக்கை நாளை
சவூதி அரேவியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற ஒருவருக்கு உணவாக ஆணிகளை உட்கொள்ள வைத்து நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை நாளை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக கடந்த ஜீலை மாதம் பணிப்பெண்ணாக ஒருவர் சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளார்.
அவர் பணி புரிந்த வீட்டு உரிமையாளரினால் உணவளிக்கப்படாமை தொடர்பில் அவர் இலங்கையில் தனது குடும்பத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்
இதனை அறிந்த அந்த வீட்டின் உரிமையாளரால் குறித்த பெண் உணவுக்கு பதிலீடாக ஆணிகளை விழுங்குமாறு துன்புறுத்தப்பட்டதாக குறித்த பெண் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
