சிவபெருமானின் படத்தைக் காட்டி ராகுல் காந்தி வெளியிட்ட கருத்தினால் சர்ச்சை
இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் இந்திய நாடாளுமன்றத்தில் சிவபெருமானின் படத்தைக் காட்டி, உண்மைக்காக நிற்க வேண்டும் என்று இந்து மதம் தெளிவாகக் கூறினாலும், இந்துக்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் 24 மணி நேரமும் வன்முறையையும் வெறுப்பையும் பரப்புகிறார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் வன்முறையாளர்கள் என ராகுல் காந்தி கூறுவது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.
ஆனால் பிரதமர் மோடியின் கருத்துக்கு பதிலளித்த ராகுல் காந்தி, ‘நரேந்திர மோடி மற்றும் பாரதீய ஜனதா கட்சி முழுமையான இந்து சமூகம் அல்ல என கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்