யாழ் நூலகத்தின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

-யாழ் நிருபர்-

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண பொதுசன நூலகம் ஏரிக்கப்பட்டு 43 வது ஆண்டினை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வானது நேற்று சனிக்கிழமை மாலை யாழ் பொதுசன நூலக முன்றலில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கலந்துகொண்டு நினைவேந்தலுக்கான முதல் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்தார்.

ஏனைய உறுப்பினர்கள்இ பொதுமக்கள் பலரும் இதில் பங்கெடுத்து தமது ஆழ்ந்த இரங்கலினை செலுத்தினர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்