
இரு குழுக்களுக்கு இடையே மோதல்: ஒருவர் பலி
-பதுளை நிருபர்-
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெமோதர நெதர்வில் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரு குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த வாக்குவாதம் நேற்று இரவு மோதலாக மாறி குறித்த நபரை சவளால் தாக்கியே கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட சவள் பொலிஸார் கைப்பற்றியதாகவும் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
உயிரிழந்தவரின் சடலம் தெமோதர கிராமிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நீதவான் பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

