கதிர்காமத்தில் உதவி பூசகர்கள் இடையே மோதல்: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

கதிர்காமம் ஆலயத்தில் உதவி பூசகர்களுக்கிடையில் நேற்று ஞாயிற்று கிழமை ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்து கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளார்.

கதிர்காமம் ஆலயத்தில் உதவி பூசகர்கராக பணி புரியும் உபுல் ரத்நாயக்க என்பவரே இதன் போது தாக்கப்பட்டுள்ளார்.

கோவிலுக்கு வந்த சட்டத்தரணி ஒருவரை உரிய முறையில் நடத்தாத காரணத்தினால் அதே ஆலயத்தைச் சேர்ந்த உதவி பூசகர் தன்னை தாக்கியதாக ஆலயத்தின் பக்தர்கள் முன்னிலையில் முகம் மற்றும் மார்புப் பகுதியில் தன்னை கொடூரமாக தாக்கியதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்தக் கோவிலில் பணியாற்றிய மற்றுமொரு இளைஞரையும் குறித்த உதவிப் பூசகர் தாக்கியதாகவும், அச்சம் காரணமாக இது தொடர்பில் முறைப்பாடு செய்யவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தாக்குதலுக்குள்ளான நபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்