𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பினரின் சிறுவர்தின நிகழ்வுகள்

அம்பாறை-திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள உமிரிசங்கமன் கிராமத்தில் 𝗦𝗣𝗔𝗡𝗗 மற்றும் சேவற்கொடியோன் ஆகிய அமைப்புகள் இணைந்து சிறுவர் தின நிகழ்வுகளை கடந்த சனிக்கிழமை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிகழ்வில் மாணவர்களுக்கான பாட புத்தகங்கள், பரிசுப் பொருட்களையும் சேவற்கொடியோன் அமைப்பினர் வழங்கி வைத்தனர்

கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றிய உறுப்பினர் குமாரதாசன்  அன்பின் முக்கியத்துவம் பற்றியும் அறியாமையைப் போக்கும் வகையில் சொற்பொழிவை நிகழ்த்தியிருந்தார்.

அத்துடன் சிறுவர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் வகையில் சிறுவர் நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் என்பன நடாத்தி பரிசுகள் வழங்கப்பட்டதுடன்,  𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பின் கலை கலாச்சார நிகழ்வுகளுக்கு பொறுப்பாக இருக்கும் நிறோஷ் தலைமையிலான விழிப்புணர்வு நாடகமும் அரங்கேறி கிராம மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது

அத்துடன்  மரநடுகை நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்