
சனல் 4 ஆவணப்படம் : ஜெனிவாவில் நடந்தது என்ன ?
–ஜெனிவாவில் இருந்து யு.எச். ஹைதர் அலி-
“சுரேஸ் சாலேவுக்கும், சஹ்ரானுக்கும் சந்திப்பு நடந்த எந்த ஆதாரமும் இல்லை – ஒப்புக்கொண்டது சனல் 4”
என்ற செய்தியை இலங்கை அரசுக்கு ஒத்தூதுகின்ற பல சிங்கள தமிழ் ஊடகங்கள் குறிப்பாக மாதா மாதம் இலங்கை புலனாய்வு பிரிவினரிடம் இருந்து பணம் பெறுகின்ற தமிழ் மொழி மூலமான ஊடகங்களும், கிழக்கு மாகாணத்திலிருந்து பிள்ளையான் மூலம் பணம் கொடுத்து இயக்கப்படுகின்ற தமிழ் மொழி பேஸ்புக் ஊடகங்கள் இந்த செய்தியை பரப்பியிருந்தது பற்றி பல நண்பர்கள் என்னிடம் தொலைபேசி மூலமும் குறுஞ்செய்தி மூலமும் தொடர்பு கொண்டு வினவி இருந்தார்கள்.
இம்மாதம் (செப்டம்பர்) 21ம் திகதி ஜெனிவாவில் மீள திரையிடப்பட்ட “இலங்கையின் ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பந்தமான ஆவணப்படம்” இந்த நிகழ்வின் இறுதியில்
இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் மற்றும் அதன் தயாரிப்பாளர் Mr. Thom Walker and Mr. Ben de Pear. ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது பலர் தங்களுடைய கேள்விகளை இந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் தொடுத்தனர்.
சனல் 4 வெளியாட்ட Sri Lanka’s Easter Bombings: Dispatches . ஆவணப்படத்தை பார்த்தவர்களுக்கு நன்கு தெரியும் அந்த ஆவணப்படத்தில் எந்த ஒரு இடத்திலும் மேஜர் ஜேனறல் சுரேஷ் சலே மற்றும் சஹரான் ஆகியவர்கள் சந்தித்துக் கொண்டார்கள் என்கின்ற விடயம் எங்கும் சொல்லப்படவும் இல்லை, காட்டப்படவும் இல்லை.
ஆவணப்படுத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துறை சந்திரகாந்தனுடன் (பிள்ளையான் ) சிறையில் இருந்த பின்னர் விடுவிக்கப்பட்ட கைதிகளான அதாவது தேசிய தவ்ஹித் ஜமாத்தின் (தீவிரவாத கும்பலின்) உறுப்பினர்களான சஹ்ரானுடைய தம்பியோடு மற்றும் (ஆறு பேருக்கு மேஜர் ஜேனறல் சுரேஷ் சலேயை அறிமுகப்படுத்தியதாகத்தான் அன்சீர் அசாத் (மௌலான)குறிப்பிடுகிறார்.
எனவேதான் ஒரு ஊடகவியலாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கும் சாஹ்ரானுக்கும் இடையிலான ஏதேனும் சந்திப்பு இடம் பெற்றதற்குரிய ஆதாரமும் உங்களிடம் இருக்கிறதா என்று. (அதாவது இந்த ஆவணப் படத்தில் காட்டப்படாத ஒரு விடயம் சம்பந்தமாக கேள்வி கேட்கிறார்) இது ஒரு மேலதிக தகவலுக்காக அவர் கேட்ட கேள்வி.
அதற்கு பதில் அளித்த இந்த ஆவணப்படத்தின் இயக்குனர், இது சம்பந்தமாக எதிர்காலத்தில் அமையப்போகும் ஒரு விசாரணை கமிஷன் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு விசாரணைகளின் ஊடாகவே தெரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயம் என்றார். ஏனென்றால் இந்த விடயம் எமது ஆவணப்படத்தில் நாம் எங்கும் காட்டப்படாத சொல்லப்படாத ஒரு விடயம்.
இந்த விடயத்தை தான் அரச ஊதுக்குழல் ஊடகங்களும் , அரச புலனாய்வு பிரிவிடமிருந்து மாத மாதம் பணம் கறக்கும் தமிழ் மொழி இனைய ஊடகங்களும் எழுதிக் கொண்டிருக்கின்றன.
