சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட மாற்றம்

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை நேற்று 2.88 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன் மசகு எண்ணெயின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதற்கமைய டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.45 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.62 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இந்நிலையில், டொலரில் மாத்திரம் மசகு எண்ணெய்யை விற்பனை செய்து வந்த சவுதி அரேபிய மற்றும் அமெரிக்கா உடனான ஒப்பந்தம் காலாவதியாகி உள்ளது. இதனால் சவுதி அரேபிய அரசு இனி யூரோ, யுவான், யென், பிட்காயின் போன்றவற்றில் மசகு எண்ணெய்யை விற்பது குறித்து பரிசீலித்துவருகிறது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்