
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க முன்னெடுத்த, தேசிய அளவிலான வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த வேகப்பந்து வீச்சாளர் அழகராஜ் லதுர்சனை, நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் நேரில் சென்று வாழ்த்தியுள்ளார்
அழகராஜ் லதுர்சனின் இந்த வெற்றி தொடர்பில் இரா சாணக்கியன் தெரிவிக்கையில்,
3500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டித் தேர்வில், முதல் கட்டத்திலேயே தன்னை நிரூபித்திருப்பது அவரது திறமைக்கும் உழைப்பிற்கும் ஒரு சான்றாகும்.
மணிக்கு 126 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் அவரது திறன், எதிர்காலத்தில் இன்னும் உயர்ந்த நிலைக்கு செல்லும் வாய்ப்பை காட்டுகிறது.
மட்டக்களப்பிலும் உலகத் தரத்தில் விளையாடக்கூடிய திறமைகள் உள்ளன என்பதை இது மீண்டும் நிரூபிக்கிறது.
நான் அவரை நேரில் வீடு தேடி சென்று சந்தித்து வாழ்த்தியபோது, அவரது எளிமையும் உறுதியும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் தொடர்ந்து கடினமாக பயிற்சி செய்து, தனது கனவுகளை நனவாக்குவார் என்று நம்புகிறேன்.
இளம் விளையாட்டு வீரர்களுக்கு இது ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் அழகராஜ் லதுர்சனுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
அவர் இலங்கைக்கும், மட்டக்களப்பு மண்ணுக்கும் பெருமை சேர்க்க வேண்டுகிறேன், என குறிப்பிட்டார்.
