
இரத்தினபுரியில் கார் – லொறி விபத்து: ஐந்து பேர் காயம்
ஹப்புத்தளை – பலாங்கொடை வீதியில் பெலிஹுஓயா பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
அதிவேகத்தில் பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் பயணித்த லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது காரில் பயணித்த ஐந்து பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்