
கடற்றொழில் படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்
கடற்றொழில் படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, சிறிய கடற்றொழில் படகுகளுக்கு ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபாயும் , நீண்ட நாள் கடற்றொழில் படகுகளின் ஒரு பயணத்திற்கு 1,50,000 ரூபாயும் வழங்கப்படவுள்ளது.
இந்த திட்டம் ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
