எமக்குரிய உரிமைகளை அரசாங்கம் தராவிட்டால் போராட தான் வேண்டும்!
மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட எருவில் பகுதியில், இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை வரவேற்கும் நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றது.
இந் நிகழ்வானது, தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர் வசீகரனின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பான ஆரம்ப புள்ளியாக இந் நிகழ்வு அமைந்திருந்ததாக, இரா சாணக்கியன் குறிப்பட்டுள்ளார்.