லுணுகலை பிரதேச செயலாளர் தலைமையில் பொசொன் தின நிகழ்வுகள்

-பதுளை நிருபர்-

லுணுகலை பிரதேச செயலாளர் சி.புவனேந்திரன் தலைமையில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட பொசொன் வலய நிகழ்வுகள் நேற்று திங்கட்கிழமை மாலை மிக பிரமாண்டமான முறையில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வினை லுணுகலை பிரதேச செயலகம் மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் சங்கங்கள் இணைந்து நடத்தியதோடு, லுணுகலை பகுதியில் உள்ள அனைத்து அரச திணைக்களங்களும் இணைந்து மிக பிரமாண்டமான முறையில் பொசொன் நிகழ்வுகள் இடம்பெற்றன.

அழகிய வெசக் கூடுகள் அமைத்து காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததோடு, ஒவ்வொரு அரச நிறுவனத்தின் ஊழியர்களினால் பக்தி பாடல் பாடப்பட்டு கடலை அன்னதானம் என்பன வழங்கப்பட்டன.

அத்தோடு பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்