
யாழில் சற்றுமுன் இடம்பெற்ற படகு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறையிலிருந்து புதிய அந்தோனியர் ஆலயத்திற்குப் புறப்பட்ட படகொன்று, விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், உயிரிழந்தவர் படகை ஓட்டிச் சென்றவர் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து, இன்று வெள்ளிக்கிழமை பாலைதீவுக்கு சென்ற ரோலர் படகு, கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீரில் மூழ்கியவர்களில் 04 பேர் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது
மேலும் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பாதிக்கப்பட்ட மேலும் சிலர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.
