
வாகனத்தின் பக்கவாட்டு கண்ணாடி திருட்டில் ஈடுபட்ட கும்பல் கைது
வாகனத்தின் பக்கவாட்டு கண்ணாடி திருட்டில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள் கும்பலை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிள்களில் வாகன நிறுத்துமிடத்திற்கு வருவதைக் காட்சிகள் காட்டுகின்றன. பின்னர் அவர்கள் இருசக்கர வாகனங்களில் இருந்து இறங்கி பக்கவாட்டு கண்ணாடிகளை கழற்றியவுடன் மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்று விடுவார்கள்.
வாகன சாரதிகள் அவதானமாக இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடினால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் வாகன ஓட்டிகளை நல்ல வெளிச்சம் உள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்துமாறும், பயன்படுத்தாத போது வாகனங்களை பூட்டி வைக்குமாறும் பொலிசார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
