
இலங்கை தேசிய கபடி அணிக்கு தெரிவாகிய மட்டக்களப்பு வீராங்கனைகள்
நேபாளத்தில் நடைபெறும் கபடி போட்டியில் இலங்கை தேசிய அணியில் மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தை சேர்ந்த 3 வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் நேபாளத்தில் நடைபெறவுள்ள கபடி போட்டியில் விளையாடுவதற்கு
இலங்கை தேசிய கபடி அணித் தெரிவில் மட்டக்களப்பு கிரான் மற்றும் கோரகல்லிமடுவை சேர்ந்தவர்கள் தெரிவாகியுள்ளனர்.
இதில் கோரகல்லிமடு கணேஷ் விளையாட்டுக் கழக கபடி அணி வீராங்கனையும், மட்/ககு/கோரகல்லிமடு ஸ்ரீ ரமண மகரிஷி வித்தியாலைய உடற்கல்வி ஆசிரியருமான கோகலிகா, கிரானை சேர்ந்த மட்/ககு/ கிரான் மத்திய கல்லூரியின் பழைய மாணவிகளும், கிரான் கருணா ஐக்கிய விளையாட்டு கழக வீராங்கனைகளுமான ஆர்.கஜேந்தினி மற்றும் எஸ்.சிந்துஜா ஆகியோரே இவ்வாறு தெரிவாகியுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
