கருணா அம்மானுக்கும் கப்பல் சின்னத்திற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை என அகில இலங்கை தமிழர் மகா சபை கட்சியின் செயலாளர் செங்கதிரோன் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
எமது செய்திப்பிரிவின் “மின்னல் தேடல்” நிகழ்ச்சியில் இந்த வாரம் கலந்து கொண்டிருந்த வேளை, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கருணா அம்மான் கப்பல் சின்னத்தில் போட்டியிட்டிருந்தமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு பாராளுன்ற உறுப்பினர் வந்தால் தானா தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படும்? வேறொரு தமிழ் கட்சியில் ஒருவர் வேட்பாளராக நின்று ஜெயித்தால் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படாதா? அவர் தமிழர் இல்லையா?
கருணா அம்மானுக்கும் அகில இலங்கை தமிழர் மகா சபையின் கப்பல் சின்னத்திற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை, அவர் எமது கட்சியின் உறுப்பினரும் இல்லை
அம்பாறையில் ஒரு தமிழரை எமது கட்சியில் வேட்பாளராக நிற்க வைக்க நாங்கள் யோசித்த போது கருணா அம்மான் அவராகவே வந்து தான் வேட்பாளராக நிற்பதாக தெரிவித்தார் அதை விடுத்து அவருக்கும் எமது கட்சிக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
அவருடைய முழுமையான கருத்தை கீழுள்ள நேர்காணல் காணொளியில் காணலாம்.