மட்டக்களப்பு – ஏறாவூரில் திருடனை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை

 

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் மாணவர்களது துவிச்சக்கர வண்டிகளை திருடும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாணவியொருவரின் துவிச்சக்கர வண்டி புகைப்படத்தில் காணப்படும் சிவப்பு நிற டீசேர்ட் அணிந்த நபரினால் களவாடப்பட்டுள்ளது.

சிவப்பு நிற மற்றும் கறுப்பு நிற டீசேர்ட் அணிந்த இவர்கள் இருவரும் இணைந்தே வருகை தந்துள்ளதுடன் சிவப்பு நிற டீசேர்ட் அணிந்தவரே இத்திருட்டில் ஈடுபட்டுள்ளதாக பாடசாலை தரப்பு தெரிவிக்கிறது..

குறித்த நபரை தெரிந்தவர்கள் பாடசாலையின் அதிபருக்கு 0706181156 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.