iDove மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களின் சிறுவர் நிகழ்வு
iDove மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் 14.08.2022 அன்று ஏறாவூர் மீராகேணி சிறுவர் இல்லத்திற்கு சென்று அங்கு பயன்தரும் மரநடுகை, மற்றும் மகிழ் வூட்ட ல் செயற்பாடுகளையும், அச்சிறுவர்களுடன் மேற்கொண்டனர்.
சிறுவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 29.10.2022 அன்று அச்சிறுவர் இல்லத்திற்கு iDove மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் மீண்டும் அங்கு சென்று மகிழ்வூட்டல் செயற்பாடுகளையும் செய்தனர்.
இதில் குறிப்பாக இளையோர் தாம் கற்றுக்கொண்ட விடயங்களை அச்சிறுவர்களுடன் பகிர்ந்திருந்தனர்.
இதில் களப்பயணம் ஒன்றின் மூலம் அவர்கள் பெற்றுக்கொண்ட பொம்மலாட்ட நிகழ்வினை சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தியதுடன், இருக்கின்ற பொருட்களை வைத்து உருவப்பொம்மைகளை எவ்வாறு உருவாக்குவது என்பது தொடர்பாகவும் அச்சிறுவர்களுக்கு தெளிவு வழங்கப்பட்டது.
இதன்போது, ஆடல், பாடல், பொம்மலாட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றது.